வவுனியாவில் விளக்கமறியலில் உள்ள கைதி மீது நேற்றுக் காலை சிறைக்காவலர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த சிறைக் கைதி வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ள னர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவரிடம் சிறைக் காவலர்கள் நேற்று சிறைக்கு வெளியே இருந்து பொதி ஒன்று கிடைத்துள்ளதாகத் தெரிவித்து அது என்ன பொதி என்று கேட்டே குறித்த சிறைக் கைதியைத் தாக்கி யுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சிறைக் கைதி வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைக்கைதி சிதம்பரபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் என்பதுடன் 32 வயதுடைய சிறு குற்றம் ஒன்றுக்காக சிறைவாசம் அனுபவித்து வருகின் றமை குறிப்பிடத்தக்கது.