முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றுமுற்பகல் 11.00 மணியளவில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது.

இதன்போது யுத்தத்தில் உயிரிழந்தோர்க்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நினைவுதின நிகழ்வினில் வட மாகாண முதலமைச்சர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப் பெரியார்கள் மற்றும் பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.