மாங்குளம் பகுதியில் 06 விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுடன் இயங்கி வருகின்ற விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களின் மகிழ்வகம் (வன்னி) அமைப்புக்கு, அவ் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க, ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான பம்பஸ், மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுதி ஒன்றை புளொட் அமைப்பினர் வழங்கியிருந்தனர்.இந் நிறுவனம், காந்தீய அமைப்பின் தலைவர் டேவிட் ஐயா அவர்களது மிக நெருக்கமான உறவுக்காரரான அருட் சகோதரி லூட்ஸ் ஜோசப் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

13.05.2018 அன்று இடம்பெற்ற இந் நிகழ்வில் ரூ 10700/- பெறுமதியான இப் பொருட்களை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் , துணுக்காய் பிரதேச சபை உப தவிசாளர் திரு. சிவகுமாரன் ( குட்டி ) வழங்கிவைத்திருந்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவிஸ் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார்(குமார்) அவர்கள் தனது தந்தையாரான அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது