கடந்த 13.05.2018 வவுனியாவில் இடம்பெற்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் செயற்குழு கூட்டத்தில் திரு. ஜி.ரி.லிங்கநாதன் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உமாமகேஸ்வரன் பவுண்டேசன் சம்பந்தமாக ஆராயப்பட்டது. இதன்போது திரு. லிங்கநாதன் அவர்கள் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் தொடர்பாக விளக்குகையில்,

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பதாகவே உமாமகேஸ்வரன் பவுண்டேசனுக்கான பூர்வாங்க வேலைகளை தானாக ஆரம்பித்துவிட்டதாகவும், அண்மையில்தான் அதற்கான பதிவு கிடைத்திருப்பதாகவும், தானும் வேறு சிலருமாக சேர்ந்துதான் இதனை ஆரம்பித்து பதிவு செய்துள்ளதாகவும் கூறியதோடு, அதனை பதிவு செய்த பின்புதான் தலைவருக்கோ, செயலாளருக்கோ அதுபற்றி அறிவித்ததாகவும், Read more