யாழ். நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் நேற்று(19) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ். செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம் – வயது66) என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

5 பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 17ஆம் திகதி மாலைமுதல் காணாமல் போயிருந்த நிலையில் குடும்பத்தினரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்றுக்காலை பெண் ஒருவர் யமுனா ஏரிக்கு தண்ணீர் அள்ளச் சென்றவேளையில், ஏரிப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. Read more