Header image alt text

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை, மேற்கத்தேய நாடுகளிடம் இருந்து விலகிச் செல்லும் நிலையில் இருப்பதாக த சிட்டிசன் என்ற சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலக அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில், இலங்கை மேற்கத்தேய நாடுகள் மற்றும் இந்தியாவுடன் இசைந்து செயற்படுவதே நன்மையானதாக இருக்கும். Read more

ஜப்பானில் ஏதிலி அந்தஸ்த்து கோரும் முதல் 5 நாட்டவர்களின் பட்டியலில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஜப்பானில் ஏதிலி அந்தஸ்த்து கோரியோரில் 70 சதவீதமானவர்கள் இலங்கை, பிலிப்பைன்ஸ், வியட்நாம், நேபாளம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். ஜப்பான் டைம்ஸ் என்ற ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more

இலங்கை இந்திய எல்லை காவல்படையினர் நெருங்கிய ஒத்துழைப்பும் நல்லுறவும் நிலவுவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சமீபத்தில் இந்திய எல்லைக்காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் விஜயம் மேற்கொண்டது இரு நாடுகளின் எல்லைக்காவல்படையினர் மத்தியிலான உறவை மேலும் நெருக்கமானதாக்குவதற்கு உதவியுள்ளது என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கனை பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடும் நடவடிக்கைக்கான அகழ்வு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் இராணுவத்தினருடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் தற்போதைய தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் நோக்கிலே இந்த விஜயம் அமையவுள்ளது. இது தவிர, அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும், பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் அவர் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பழச் செய்கை தோட்டத்தில் யானையொன்று மரணித்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தை தற்போது பராமரிக்கும் இராணுவத்தின் 683ஆவது படைப்பிரிவில் பணியாற்றும் குறித்த அதிகாரி, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் மரணித்த குறித்த யானை தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Read more

இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் நிலைபேறான கடல்சார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அந்த வகையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் ஆகியோருக்கிடையிலேயே இந்த ஒப்பந்தம் கடந்தவாரம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. Read more

நூற்றுக்கு 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றுகாலை அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.

அதேநேரம் குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார். இந்த கட்டண அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வர உள்ளதாக அவர் கூறினார். அதேநேரம் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார். Read more

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதி சபாநாயகர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிபாரிசு செய்துள்ளதாக அமைச்சர் மனோகணேஷன் குறிப்பிட்டுள்ளார்.

அங்கஜன் எம்.பியை பிரதி சபாநாயகர் பதிவிக்கு ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளமை குறித்த தகவலை, இன்று கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியா தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

யாழ்.திருநெல்வேலியில் இன்று பிற்பகல் திடீரென தென்னைமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் குறித்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்துள்ளது.

இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சுமார் அரை மணித்தியாலத்திற்கும் மேலாகக் கொளுந்துவிட்டு எரிந்த தீயை விரைவாகச் செயற்பட்ட தீயணைப்புப் படையினர் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். Read more