இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் நிலைபேறான கடல்சார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அந்த வகையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் ஆகியோருக்கிடையிலேயே இந்த ஒப்பந்தம் கடந்தவாரம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்தை பாதுகாத்தல், அதன்மூலம் நிலைபேறுடைய பொருளாதாரத்தை உருவாக்குதல் கடல்நீர் மாசாக்கத்தை தடுத்தல், மீன்பிடி மற்றும் மூலோபாய அடிப்படையிலான முதலீடுகள் என்பவற்றை ஊக்குவத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.