இலங்கையின் வெளியுறவுக் கொள்கை, மேற்கத்தேய நாடுகளிடம் இருந்து விலகிச் செல்லும் நிலையில் இருப்பதாக த சிட்டிசன் என்ற சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலக அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில், இலங்கை மேற்கத்தேய நாடுகள் மற்றும் இந்தியாவுடன் இசைந்து செயற்படுவதே நன்மையானதாக இருக்கும்.ஆனால் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு சார்பாக இலங்கை அண்மைக்காலமாக நகர்ந்து வருவதை அவதானிக்க முடிவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.