இலங்கை இந்திய எல்லை காவல்படையினர் நெருங்கிய ஒத்துழைப்பும் நல்லுறவும் நிலவுவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சமீபத்தில் இந்திய எல்லைக்காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் விஜயம் மேற்கொண்டது இரு நாடுகளின் எல்லைக்காவல்படையினர் மத்தியிலான உறவை மேலும் நெருக்கமானதாக்குவதற்கு உதவியுள்ளது என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய இலங்கை எல்லைக் காவல்படையினர் மத்தியிலான மூன்றாவது உயர்மட்ட சந்திப்பிற்காக ராஜேந்திர சிங் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த உயர்மட்ட சந்திப்பின்போது கடலில் இடம்பெறும் எல்லை கடந்த சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக இருநாடுகளும் நெருங்கிய உறவினை பேணுவது என தீர்மானிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.