Header image alt text

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 8 பேர் சீரற்ற காலநிலையால் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

15 மாவட்டங்களில் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை களனி, களு, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்களை அவதாகத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். Read more

இலங்கையை சேர்ந்த ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்த இரண்டாவது இலங்கையராக பதிவாகியுள்ளார். நேபாள நேரத்தின்படி இன்று காலை 5.55 மணியளவில் அவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இரண்டாவது முயற்சியிலேயே அவர் 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முற்பட்டு அதனை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இன்று அந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். Read more