Header image alt text

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களை சேர்ந்த 105,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடனான காலநிலை இன்றிரவு முதல் சற்று அதிகரிக்ககூடும் என்றும் கூறப்படுகின்றது. மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை எதிர்கொண்டுள்ள இயற்கை அனர்த்தத்துக்கு தயாராவதற்கும், உடனடியாக செயற்படுவதற்குமாக அவுஸ்ரேலிய அரசாங்கம், உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெப் அமைப்பு ஆகியன இணைந்து 89 மில்லியன் ரூபா நிதியை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

மூன்று வருட காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு, இதற்கான உடன்படிக்கை சமீபத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் வெள்ளம், கடும்காற்று, வறட்சி முதலான இயற்கை அனர்த்தங்கள் எதிர்கொள்ளும் நாடுகளில் முக்கிய நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. Read more

பாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

கல்வியமைச்சர் தலைமையில் கல்வித் திணைக்களத்தில் இது தொடர்பான அங்குரார்பண நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வைத்தியர்களின் அறிவுரைகளுக்கமைய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு உடலுக்கு மிகவும் எளிமையான ஆடை ஒன்றை தமது கர்ப்ப காலத்தில் அணியும் சந்தர்ப்பம் இந்த புதிய திட்டத்தினால் வழங்கப்படுகிறது. Read more

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மே மாதம் 24, 25, 26, 27 மற்றும் ஜூன் மாதம் 02 ஆம் திகதிகளில் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பிற்போடப்பட்ட பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டா 5 என்பன படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டில் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. Read more

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தலப் பகுதியில் யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடல் இன்றுகாலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. Read more

யாழ்ப்பாணம், கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தொலைக்காட்சி இயங்காத காரணத்தால், கேபிள் டிவி இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்டபோது, அதி உயர் அழுத்தம் மின்சாரம் தாக்கியதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். கேபிள் டிவி வயருடன் மின் விநியோக இணைப்பும் தொடர்புபட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். Read more

தம்மால் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்கு வருமாறு மாணவர்களுக்கு மற்றும் பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கும் 31 ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இருந்து இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர்களின் மேலதிக வகுப்புகளில் கலந்துகொள்ளாத மாணவர்கள் பாடசாலைகளில் பல்வேறு வகையில் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக குறித்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

வவுனியா புகையிரத நிலையத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள புகையிரதக்கடவைக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு திருட்டதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். Read more