பாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

கல்வியமைச்சர் தலைமையில் கல்வித் திணைக்களத்தில் இது தொடர்பான அங்குரார்பண நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வைத்தியர்களின் அறிவுரைகளுக்கமைய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு உடலுக்கு மிகவும் எளிமையான ஆடை ஒன்றை தமது கர்ப்ப காலத்தில் அணியும் சந்தர்ப்பம் இந்த புதிய திட்டத்தினால் வழங்கப்படுகிறது. இலங்கையில் 236,000 ஆசிரியர்கள் கடமையாற்றுவதாகவும் அதில் 172,000 பேர் ஆசிரியைகள் எனவும் இவர்களில் சுமார் 10,000 பேர் வருடம் ஒன்றிற்கு கர்ப்பம் தரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, பாடசாலைகளில் கடமையாற்றும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு நாளைமுதல் இந்த எளிமையான ஆடையை அணிய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.