வவுனியா புகையிரத நிலையத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள புகையிரதக்கடவைக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு திருட்டதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.குறித்த வர்த்தக நிலையத்தினை திறப்பதற்குச் சென்றபோதே திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும், குறித்த வர்த்தக நிலையத்தில் கோர்லீப், மீள் நிரப்பு அட்டைகள், சிறுதொகைப்பணம் என்பன திருடப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.