யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தரம் 7இல் கல்வி கற்கும் 12 வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரொருவர் இன்று தெல்லிப்பளை காவற்துறையால் கைது செய்யப்பட்டார்.

குறித்த பாடசாலையின் கணித பாட ஆசிரியரான செல்வரத்தினம் சத்தியநாராணயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல சந்தர்ப்பங்களில் குறித்த 7 மாணவிகளையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இது தொடர்பில் எவருக்கும் தெரிவிக்கக் கூடாது என குறித்த மாணவிகளை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், குறித்த ஆசிரியரின் தொடர் தொந்தரவு காரணமாக பொறுத்துக்கொள்ள முடியாத மாணவியொருவர் இது தொடர்பில் அவரின் பெற்றோருக்கு அறிவித்துள்ளதை தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக தெல்லிப்பளை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனை தொடர்பில் தெல்லிப்பளை காவற்துறையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மற்றைய மாணவிகளும் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் காவற்துறைக்கு தெரிவித்ததை தொடர்ந்து குறித்த ஆசிரியர் உடனடியாக தெல்லிப்பளை காவற்துறையால் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட கணித ஆசிரியர் இன்றையதினம் யாழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், சந்தேகநபரான ஆசிரியருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.