தமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்று வரும் கலவரத்தினைக் கட்டுப்படுத்த இந்திய இராணுவம் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதன் போது மேற்பொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதோடு 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தூத்துக்குடியின் அண்ணாநகரில் இன்றும் பதற்ற நிலை நீடிக்கிறது. பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமடையாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதோடு, 500 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.