தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் இன்று மாலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் மாணவர்களை வெளியேற்றியதைக் கண்டித்தும், அவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்தும் குறித்த மாணவர்களின் தடையை உடனடியாக நீக்குமாறும், அவர்களை மீள அனுமதிக்கமாறும் பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்வார்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர் நடவடிக்கை குழுவினர் தெரிவித்தனர்.

இவ்வார்ப்பாட்டம், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து நடைபவணியாக பதாதைகளை ஏந்திய வண்ணம் முன்னெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.