ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பொதி சோதனையாளர்களின் பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து ரயில்வே பொதி சோதனையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் தாமும் அவர்களுடன் பகிஷ்கரிப்பில் இணைந்துக் கொள்வதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.