வவுனியாவில் இன்றுகாலை புதிய பேருந்து நிலையத்தில் 4கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்றுகாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் கேரளா கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட பொலிசார் யாழ்ப்பாணம் தாளையடியைச் சேர்ந்த கணேசலிங்கம் கோகிலம் 44 வயதுடைய பெண் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.இதன்போது அவரிடமிருந்து 4கிலோ 62கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும், குறித்த கஞ்சாவினை ஹொறவப்பொத்தான பகுதியில் நபர் ஒருவருக்கு வழங்குவதற்கு எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்.