நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்த உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய, அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பிஇ இன்று கையளித்துள்ளது.
தனிநபர் பிரேரணையாகவே, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திஸாநாயக்கவிடம் கையளித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக, இதற்கு முன்னர் ஆட்சிபீடமேறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும், 2018ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதியன்று ஆட்சிபீடமேறிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், உறுதியளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.