இராணுவமயமான ஆட்சி ஒன்றை மீண்டும் உருவாக இடமளிக்கமுடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? இல்லது ராஜபக்ஷ ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். மகிந்த அணியினர் எப்போதும் நாடாளுமன்றத்தில் கூச்சல்களை எழுப்புவது, மகிந்தவை மீண்டும் ஆட்சியில் ஏற்றவேண்டும் என்ற நோக்கத்துடனேயே பல ஊடகவியலாளர்கள் மகிந்த ஆட்சி காலத்தில் கொல்லப்பட்டும், கடத்தப்படும் உள்ளனர். தற்போது மகிந்தவை ஆட்சியில் ஏற்ற முயற்சிக்கின்ற சில ஊடகவியலாளர்களுக்கும், அவர் ஆட்சிக்கு வந்தால் அந்த நிலைமையே ஏற்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.