இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலைனா பி டெப்பிளிட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரது நியமனத்தை செனெட் அங்கீகரிக்கும் பட்சத்தில் அதுல் கெசாப்பிற்கு பின்னர் அலைனா டெப்பிளிட்ஸ் இலங்கை தூதுவராக பணியாற்றுவார். தற்போது நேபாளிற்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றும் அலைனா டெப்பிளிட்சையே டிரம்ப் இலங்கை தூதுவராக நியமித்துள்ளார். புதிய தூதுவர் அமெரிக்க வெளிவிவகார சேவையை சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.