இலங்கையில் சீனா தமது இராணுவமயமாக்களை மேற்கொள்வதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டவை அன்றி வேறில்லை என்று சீனாவின் தூதுவர் செங் க்சியுவான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சீனா மேற்கொள்ளும் முதலீடுகள் இருதரப்பு நன்மை சார்ந்தது. ஆனால் இராணுவமயமாக்களை மேற்கொள்வதாக சிலத்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.