ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை நோக்கி அச்சுறுத்தும் விதத்தில் சைகை செய்து சர்ச்சையில் சிக்கிய பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கர பெர்ணான்டோ குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம்ஸ் குறிப்பிட்ட விவகாரம் குறித்து மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள பிரிட்டனின் ஆசிய விவகாரங்களிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் பொதுநலவாய மாநாட்டின்போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார். ஏப்ரல் 15 ஆம் திகதியுடன் அந்த அதிகாரியின் பணியை இலங்கை அரசாங்கம் முடித்துக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் புதிதாக எவரையும் இலங்கை நியமிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.