வவுனியா ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செட்டிகுளம் பகுதியில் 2ஆம் படிவத்தில் வசிக்கும் பாலசுந்தரம் நிரோசனே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் ஓமந்தைப் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனின் கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.துண்டிக்கப்பட்ட காலினை பொலிஸார் 15 நிமிடங்களின் பின்னர் வைத்தியசாலைக்கு எடுத்து சென்று ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.