சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நிவாரணப் பணிகளுக்காக தற்போதைய நிலையில் 49 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள டிங்கி படகுகளை 49ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. இன்று முற்பகல் 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி ஹீதவயில் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் மேலும் கூறியுள்ளது.