Header image alt text

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை நோக்கி அச்சுறுத்தும் விதத்தில் சைகை செய்து சர்ச்சையில் சிக்கிய பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கர பெர்ணான்டோ குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம்ஸ் குறிப்பிட்ட விவகாரம் குறித்து மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள பிரிட்டனின் ஆசிய விவகாரங்களிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் பொதுநலவாய மாநாட்டின்போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் எஸ்.அமல நாதன் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டம் அதிகளவான பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் 9831 குடும்பங்களைச் சேர்ந்த 42,053 பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இராணுவமயமான ஆட்சி ஒன்றை மீண்டும் உருவாக இடமளிக்கமுடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? இல்லது ராஜபக்ஷ ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். Read more

புதையல் தோன்றுவதற்கு முயற்சி செய்தவர்கள் எனும் சந்தேகத்தின்பேரில் ஏழு பேர் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கல்மடுவில் உள்ள காணி ஒன்றில் பூஜை ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் மூவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய நால்வரும் கொழும்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. Read more