முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலளர் பிரிவின் கீழ் உள்ள அமைதிபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தமக்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தித்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலளர் பிரிவின் கீழ் உள்ள எல்லையோரக் கிராமங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற அமைதிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கான அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேற சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். அதாவது, குடிநீர் நெருக்கடிக்கு முகங்கொடுப்பதுடன் இந்தப்பிரதேசத்தில் காணப்படுகின்ற 13 கிலோமீற்றர் வரையான உள்ளக வீதிகள் புனரமைக்கப்படாமலும் போக்குவரத்;து வசதிகள் இன்மையாலும் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதி மக்கள் 23 வரையான குடும்பங்களுக்கு வயல் காணிகள் இன்றியும் ஏனைய குடும்பங்களுக்கு மேட்டுநிலப் பயிர்ச்செய்கைகளுக்கான காணிகள் இல்லாத நிலையும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள இப்பிரதேச மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.