இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் சுமார் 6,000 சீனர்கள் பணியாற்றுகின்றனர் என, கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இவர்களில் பெரும்பாலானோர், இலங்கையர்களுக்குத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென, அவர் தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுக நகர் வேலைத்திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுக வேலைத்திட்டம், நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்புப் போன்ற கட்டுமானப் பணிகளிலும் சீன நாட்டவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.