மட்டக்களப்பு சந்திவெளி ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் திகிலிவட்டை கிராமத்தில் நண்பரின் மரண வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு நண்பர்களுடன் சம்பவதினம் இரவு 10 மணியளவில் சந்திவெளி ஆற்றைக் கடக்க தோணியில் ஏறி சென்றுள்ளார். ஆற்றில் சென்று கொண்டிருக்கும் வேளை தோணி கவிழ்ந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.

சந்திவெளி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய யோகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இன்று காலை சடலம் கரையொதுங்கிய நிலையில் சடலத்தை பொலிசார் மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.