பசு வதைக்கு எதிராகவும் கொல்களத்தை மூடுமாறு தெரிவித்தும் சாவகச்சேரி மத்திய பஸ் நிலையத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில், யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி விமலதேரர், நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியர், ஜாக்கிரத சைதன்ய சின்மிய மிஷன் சுவாமிகள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.