வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் நிவாரணக் குழுக்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் உத்தரவிட்டுள்ளார்.

இன்று பகல் அலைபேசி மூலம் அமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சில நிவாரணக் குழுக்கள் மக்களிடம் கப்பம் பெறுவதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கமையவே அமைச்சரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இவ்வாறான குழுக்கள் தொடர்பில், 119 அல்லது 117 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.