கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்களான சுவாமிநாதன், விஜயகலா, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாவை சேனாதிராஜா, வட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.