இன்று அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் நாவலப்பிட்டி கெட்டபுலா புதுக்காடு தோட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 14 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களை சேர்ந்த 60 பேரை கெட்டபுலா இலக்கம் 02 தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை, கந்தபளை போட்ஸ்வூட் பகுதியில் கடும் காற்று காரணமாக மூன்று வீடுகள் சேதமாகியுள்ளது. மேலும், இன்று மாலை வேளைகளில் இடி, காற்றுடன் கூடிய மாலை பெய்வதால் அனைவரும் பாதுகாப்புடன், அல்லது பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல வேண்டும் என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.