Header image alt text

ஏ 35 பரந்தன் முல்லை வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி, டிப்பர் ரக வாகனம் மற்றும் ஜீப் வண்டி ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட ஜீப் வண்டி, டிப்பர் வாகனத்தின் பின்னால் மோதியுள்ளது. Read more

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று 3 ஆவது நாளாக இடம் பெற்று வருகின்றது.

´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் ஆகியவை கடந்த திங்கட்கிழமை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. Read more

மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் உடப்பு மற்றும் ஆனமடு கிராமங்களுக்கு மக்கள் பயணம் செய்வதற்காக, கடற்படையினரால் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஐந்து கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய, சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளநீர் வடிந்தோடாமையின் காரணமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். Read more

தமிழகம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கொலையுண்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரியும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களால் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. Read more

மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகலாவிய அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ‘ஏ” தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் சுதந்திரம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பேணப்படுகின்றமை தொடர்பில் ஆராயப்பட்டத்தன் பின்னரே ‘ஏ’ தர சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இது கிடைத்துள்ளமை இலங்கை மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி என அதன் தலைவர் என டி.உடகம தெரிவித்துள்ளார். Read more

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தலை, முடிந்தவரை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாகாண சபைத் தேர்ல் தொடர்பில் அவர் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் பிரதிநிதிகளுக்கு தாம் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால், நட்டத்தை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் இன்றுகாலை மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி மகாத்மா காந்தி பூங்காவரை முன்னெடுக்கப்பட்டது. நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக கடந்த 25ம் திகதி நீர்மட்டம் உயர்வடைந்ததை அடுத்து உன்னிச்சைக் குளத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டன. Read more

இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

தொழிலுக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையில் அவர் பயணித்த உந்துருளி பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். Read more