இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

தொழிலுக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையில் அவர் பயணித்த உந்துருளி பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சிந்தன தனஞ்ஜன என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்;. உயிரிழந்தவரின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதோடு இறுதி கிரியைகள் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.