ஏ 35 பரந்தன் முல்லை வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி, டிப்பர் ரக வாகனம் மற்றும் ஜீப் வண்டி ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட ஜீப் வண்டி, டிப்பர் வாகனத்தின் பின்னால் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் முன்னாள் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் மூன்று வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில் யாழ்ப்பாணம், மந்துவில் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஜோன் செல்வகுமார் எனும் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.