மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால், நட்டத்தை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் இன்றுகாலை மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி மகாத்மா காந்தி பூங்காவரை முன்னெடுக்கப்பட்டது. நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக கடந்த 25ம் திகதி நீர்மட்டம் உயர்வடைந்ததை அடுத்து உன்னிச்சைக் குளத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டன. இதனால் சுமார் ஆறாயிரம் ஏக்கர் சிறுபோக நெற்செய்கை நீரில் மூழ்கியமையினால், அதற்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரியே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.