மாகாண சபைத் தேர்தலை, முடிந்தவரை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாகாண சபைத் தேர்ல் தொடர்பில் அவர் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் பிரதிநிதிகளுக்கு தாம் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாண சபைகளின் பதவிக்காலம் நேற்றைய தினத்துடன் (29) முடிவைடைந்துள்ளன. எனினும் தேர்தல் முறை மாற்றம் காரணமாக அந்த சபைகளுக்கு இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. எவ்வாறெனினும் வடமேல், மத்திய மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கானத் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ளது. மேலும் எஞ்சியுள்ள மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் அடுத்த வருடம் முடிவடையவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.