வாக்காளர்களை பதிவு செய்யும் நடைமுறைக்கு அமைய, ஒரு வீட்டின் பிரதான குடியிருப்பாளர்கள் முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்தை கையளிக்கும்போது, அதனை பெற்றுக்கொண்டமைக்கான பற்றுச்சீட்டை, கிராம சேவகர் வழங்குவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்துக்கு அமைய, கிராம சேவகர் அல்லது விசேட கணக்கெடுப்பு உத்தியோகத்தர் இந்தப் பற்றுச்சீட்டை கட்டாயம் வழங்க வேண்டுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் இடாப்புத் திருத்தப் பணிகள் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான நிலையில், குடியிருப்பாளர்களுக்கு வாக்காளர்களை பதிவு செய்வதற்கான பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.