Header image alt text

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தலை, முடிந்தவரை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாகாண சபைத் தேர்ல் தொடர்பில் அவர் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் பிரதிநிதிகளுக்கு தாம் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால், நட்டத்தை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் இன்றுகாலை மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி மகாத்மா காந்தி பூங்காவரை முன்னெடுக்கப்பட்டது. நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக கடந்த 25ம் திகதி நீர்மட்டம் உயர்வடைந்ததை அடுத்து உன்னிச்சைக் குளத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டன. Read more

இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

தொழிலுக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையில் அவர் பயணித்த உந்துருளி பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். Read more

ரயில்வே தொழிற் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்படும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை போக்குவரத்து சபை மேலதிக சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாளாந்தம் இலங்கை போக்குவரத்து சபை வழமையாக 5,400 பஸ்களை சேவையில் ஈடுப்படுத்துகின்றது.

பணி பகிஷ்கரிப்பு காரணமாக இத்தொகையை 5,700ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார். Read more

வாக்காளர்களை பதிவு செய்யும் நடைமுறைக்கு அமைய, ஒரு வீட்டின் பிரதான குடியிருப்பாளர்கள் முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்தை கையளிக்கும்போது, அதனை பெற்றுக்கொண்டமைக்கான பற்றுச்சீட்டை, கிராம சேவகர் வழங்குவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்துக்கு அமைய, கிராம சேவகர் அல்லது விசேட கணக்கெடுப்பு உத்தியோகத்தர் இந்தப் பற்றுச்சீட்டை கட்டாயம் வழங்க வேண்டுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். Read more

எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் 20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்தது.

அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன கூறினார். Read more

2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், 2.5 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பஸ் போக்குவரத்தைத் தவிர்த்து மாற்றுப் போக்குவரத்துக்கு மாறியுள்ளதாக இலங்கைத் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பயணிகளில் பெரும்பாலானோர், பஸ் போக்குவரத்தைத் தவிர்த்து, மோட்டார் பைசிக்கள், மோட்டார் வாகனங்கள், தனியார் அலுவலக போக்குவரத்து வாகனங்கள் மற்றும் ரயில்களில் பயணஞ்செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். Read more

அனைத்து அரச நிறுவனங்களிலும் அரசமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இது தொடர்பில் தான் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கொழும்பு லக்ஸ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். Read more

சோமாலியாவில் நிர்கதியாக்கப்பட்ட 12 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பிரச்சினைகளால் நிர்கதியான குறித்த இலங்கையர்களை மீட்பதற்காக, அடிஸ்அபாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் சர்வதேச குடியேறிகளுக்கான ஒழுங்கமைப்பு என்பவற்றின் ஊடாக, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more