Header image alt text

இன்று அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் நாவலப்பிட்டி கெட்டபுலா புதுக்காடு தோட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 14 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

அனைத்து புகையிரத தொழிநுட்ப சேவையின் ஒப்பந்த மற்றும் மேலதிக பணியாளர்களை உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறு புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சேவைக்கு சமூகமளிக்காவிட்டால் அவர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நகர நுழைவாயில் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில், நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, மேலும் சில மனித எலும்புத் துண்டுகளும் மனித பற்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

விற்பனை நிலைய வளாகத்திலும் மன்னார் பொது மயானத்துக்குப் பின்பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மேற்படி விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழப்பட்ட மண்ணிலுமே, இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றின் பிரதேச செய்தியாளர் மற்றும் பத்திரிகை விநியோகஸ்தர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா இராஜேந்திரன் (வயது -55) என்பவரே படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஐந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்களான சுவாமிநாதன், விஜயகலா, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாவை சேனாதிராஜா, வட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் நிவாரணக் குழுக்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் உத்தரவிட்டுள்ளார்.

இன்று பகல் அலைபேசி மூலம் அமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சில நிவாரணக் குழுக்கள் மக்களிடம் கப்பம் பெறுவதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கமையவே அமைச்சரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் சட்டத்துறை வல்லுனர்கள் ஆராய்ந்து வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட இணைப்புச் செயலாளர் தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுத் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். Read more

மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் வீதியில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் கத்தோலிக்க கன்னியர் மடம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை நேற்று இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் பாதையில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை வீதி ஓரத்தில் சிறிய கோவில் போன்று அமைக்கப்பட்டு பல வருடங்களாக அவ்விடத்தில் வழிபட்டுவந்த மரியன்னையின் சிலையே இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. Read more

முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக திடீர் அனர்த்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததாக இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more

கொச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 227 பயணிகளுடன் இன்று மாலை கிளம்பிய ருடு 167 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம், ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் மோதியுள்ளது.

இதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது. Read more