களுபோவில பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் கொ{ஹவெல பொலிஸார் மற்றும் தீ அணைப்பு பிரிவினரின் உதவியுடன் இந்த தீ கட்டுப்பாட்டற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் வங்கியின் முன்னாள் உள்ள பகுதியுத் ஏ.டி.எம் இயந்திரமும் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்திற்கான காரணமே விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களே இதுவரையில் இனங்காணப்படவில்லை. சம்பவம் தொடர்பில் கொ{ஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
–
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளித்தனர்.
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் சுமார் 6,000 சீனர்கள் பணியாற்றுகின்றனர் என, கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன.
இந்தியாவின் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலை செய்தவர்களை கண்டித்தும் இலங்கையில் இன்று ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு சந்திவெளி ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் உட்பட சாரதிகள், அனைத்து வேலையாட்கள், இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் நடத்தினர்.