Header image alt text

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலளர் பிரிவின் கீழ் உள்ள அமைதிபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தமக்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தித்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலளர் பிரிவின் கீழ் உள்ள எல்லையோரக் கிராமங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற அமைதிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கான அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேற சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். Read more

பசு வதைக்கு எதிராகவும் கொல்களத்தை மூடுமாறு தெரிவித்தும் சாவகச்சேரி மத்திய பஸ் நிலையத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில், யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி விமலதேரர், நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியர், ஜாக்கிரத சைதன்ய சின்மிய மிஷன் சுவாமிகள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.

நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி முதலான ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலாவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் 20 மாவட்டங்களில் 157 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 36 ஆயிரத்து 50 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். Read more

மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் பணம் கேட்கிறார்கள் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான பெருமளவு பணத்தை மீள்குடியேற்ற அமைச்சு படையினருக்கு கொடுப்பதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார். இந்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் சுவாமிநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று அனைத்து பேரூந்துகளும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் நா.நகுலராஜா நேற்று தெரிவித்துள்ளார்.

வட மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வகையில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வலைப்பாட்டு கிராமத்திற்கு வவுனியா மாங்குளம் மல்லாவி ஊடாக பேரூந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியமைக்கும், Read more

யாழ். தென்மராட்சிப் பகுதியில் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கோகிலாக்கண்டிக் கிராமத்தில் அமைந்துள்ள காந்தி முன்பள்ளியின் வேண்டுகோளுக்கிணங்க, அப் பள்ளிச் சிறுவர்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான மண்ணில் வடிவமைக்கப்பட்ட நீர்க் குடுவை, அடுப்பு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிக்குத் தேவையான பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை புளொட் அமைப்பினர் வழங்கியிருந்தனர்.

22.05.2018 அன்று இடம்பெற்ற இந் நிகழ்வில் ரூ 7500/= பெறுமதியான இப் பொருட்கள், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் R. சர்வேஸ்வரன், காந்தி சனசமூக நிலையத்தின் தலைவர் A. பாலேந்திரா, பொருளாளர் K. சிறீஸ்கந்தராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சாவகச்சேரி பிரதேச செயற்பாட்டாளர் திரு. A.சிவகுமார், கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் பொருளாளர் ஆர்.தயாபரன் முன்னிலையில் முன்பள்ளி ஆசிரியை லாவன்யா சற்குணநாதனிடம் கையளிக்கப்பட்டிருந்தன. Read more

இலங்கையில் சீனா தமது இராணுவமயமாக்களை மேற்கொள்வதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டவை அன்றி வேறில்லை என்று சீனாவின் தூதுவர் செங் க்சியுவான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சீனா மேற்கொள்ளும் முதலீடுகள் இருதரப்பு நன்மை சார்ந்தது. Read more

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்த உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய, அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பிஇ இன்று கையளித்துள்ளது.

தனிநபர் பிரேரணையாகவே, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திஸாநாயக்கவிடம் கையளித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக, இதற்கு முன்னர் ஆட்சிபீடமேறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, Read more

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நிவாரணப் பணிகளுக்காக தற்போதைய நிலையில் 49 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள டிங்கி படகுகளை 49ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. Read more

தமிழ்நாடு தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. “மோடி அரசே தமிழகத்திலா உன் சூட்டுப் பயிற்சி, சுடாதே சுடாதே தமிழர்களைச் சுடாதே, அடிக்காதே அடிக்காதே தமிழர்களை அடிக்காதே, சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா?, Read more