Header image alt text

விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் வைபவம் 29.06.2018 அன்று காலை 9:30 மணியளவில் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை வளாகத்தில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி அ .சகிலாபானு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட 50% ஆன அறவீட்டுத் தொகை மற்றும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை திட்டம் (2018) ஆகியவற்றின் கீழ் வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது . Read more

தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெர்ரா நகரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயன்படுத்தப்படுத்தப்பட்டது குண்டுவீசும் ரஷ்ய முசய்ஃபிரா விமானம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல் தொடங்கிய 11 நாட்களில் 90க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

சுழிபுரம் – காட்டுப்புலத்தைச் சேர்ந்த மாணவி சிவநேஸ்வரன் றெஜினா துன்புறுத்தல்களுக்கு பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார் என பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பரிசோதனைகளைத் தொடர்ந்து பிற்பகல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. Read more

ஒரு புறம் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேசிக்கொண்டு மறுபுறம் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான கட்சிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தாரைவார்த்து கொடுப்பதுதான் உங்கள் கட்சியின் கொள்கையா? என பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை பின்பற்றி வெற்றி பெற்றவர்கள் யோக்கியமானவர்கள் என்றால் அதில் இருந்து வெளியேறிவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் செயலாளருமாகிய துரைராஜசிங்கம் அவர்கள் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது Read more

தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்த முன்னோடிகளில் ஒருவரான தோழர் சின்னையா கமலபாஸ்கரன் அவர்கள் 19/06/2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கையெய்திய செய்தியை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

ஈழத்தின் திருமலையின் தவப்புதல்வனான அமரர் கமலபாஸ்கரன் அவர்கள் 1950க்களின் முற்கூறுகளில் மேற்படிப்பிற்காக பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்து அங்கு மருத்துவத்துறை தொழிநுட்பவியலாளனாக விளங்கினார். Read more

அரசியல் தீர்வு வரும் வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள்.

இதை நான் முழுக்க, முழுக்க வடக்கு கிழக்கில் வாழும் பாமர மக்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன் என்பதை சம்பந்தன் புரிந்துக்கொள்வார் என நம்புகிறேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more

முலைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உடைமைகளுடன் பொலிஸாரிடம் சிக்கியபோது தப்பிச் சென்ற சந்தேக நபரை ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் பிரிவு கடுமையாகத் தேடிவருகிறது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பேராறு பகுதியில் இன்று காலை வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட்டிருந்தனர்.
இதன்போது விடுதலைப் புலிகளின் கொடி, சீருடை மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்தனர். Read more

தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள்மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் புளொட் அமைப்பினால் அனுட்டிக்கப்பட்டு வரும்வீர மக்கள் தினத்திற்கான ஏற்பாடுகள் தாயகத்திலும் சர்வதேச நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம் அவர்களது நினைவுநாளான 13.07.2018 தொடக்கம் கழகத்தின் செயலதிபர் தோழர். க. உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுநாளான 16.07.2018 வரையிலான நாட்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று இறுதி நாளன்றுஅனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு நடைபெறும்.

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் (2018) சூறிச் மாநிலத்தில்…
அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் (08.07.2018 அன்று காலை 08.00 மணிக்கு) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் அன்றையதினம் பிற்பகல், அதே மண்டபத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 29வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

Read more

கடும் விசனம் – உறுப்பினர் காண்டீபன்
நகர சபைக்கு சொந்தமான நிலப்பரப்பில் நகர சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியதிற்கு பதிலளிக்கும் போது புளொட் அமைப்பின் நகர சபை உறுப்பினர் காண்டீபன், இவ்வாறு தெரிவித்தார்
கடந்த ஆண்டு மார்கழி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நகர சபைக்கு சொந்தமான நிலப்பரப்பில் அத்துமீறி இரண்டு மாடி வியாபார கட்டிடம் ஒன்றினை கட்டியது மட்டும் அல்லாமல் நகர சபையின் செயலாளரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் Read more