Header image alt text

மது இன விடுதலைப் போராட்டத்தில் மரணித்த கழகக் கண்மணிகள் மற்றும் அனைத்து இயக்க போராளிகள் பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூருமுகமாக யூலை (ஆடி)மாதம் 13 தொடக்கம் 16 வரை நினைவு கூரப்பட்டு வரும் வீரமக்கள் தின நிகழ்வின் 2018ம் ஆண்டு நிகழ்வுக்காக இன்று (03.06) மாலை 04.00 மணிக்கு கோவில் குளம் உமாமகேசுவரன் இல்லம் வவுனியா தலைமை காரியாலத்தில் 29வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கழகத்தின் வவுனியா மாவட்டபொறுப்பாளரும் நகரசபையின் உறுப்பினருமான கௌரவ க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Read more

மலையகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கடும் மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் மேலதிக நீர் வெளியாகி செல்கின்றன.

அதனால் இந்த நீர் தேகத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. Read more

உதவச் சென்ற பாலத்தீன பெண் தன்னார்வலர் இஸ்ரேல் சுட்டதில் பலி இஸ்ரேல் – பாலத்தீன எல்லையில் நடந்துவரும் சண்டையில் இஸ்ரேல் படைகள் சுட்டதில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவ உதவி வழங்கச் சென்றபோது, கடந்த வெள்ளிக்கிழமை, இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வயதாகும் பெண் தன்னார்வலர் ரஸன் அல்-நஜாரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கலந்துகொண்டனர்.
சண்டை நடக்கும் பகுதியில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலை தெரிவித்துள்ளது