உதவச் சென்ற பாலத்தீன பெண் தன்னார்வலர் இஸ்ரேல் சுட்டதில் பலி இஸ்ரேல் – பாலத்தீன எல்லையில் நடந்துவரும் சண்டையில் இஸ்ரேல் படைகள் சுட்டதில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவ உதவி வழங்கச் சென்றபோது, கடந்த வெள்ளிக்கிழமை, இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வயதாகும் பெண் தன்னார்வலர் ரஸன் அல்-நஜாரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கலந்துகொண்டனர்.
சண்டை நடக்கும் பகுதியில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலை தெரிவித்துள்ளது