மாகாண சபை தேர்தலின் போது, வாய்ப்புக் கொடுத்தால், வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓடும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசியல் நிலவரங்கள் தொடர்பான ஊடகவியலாளர்கள் மாநாடு இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.தமிழ் மக்களின் பின்னடைவிற்கு அரசாங்கம் காரணம் அல்ல, தமிழ் தலைமைகள் தான் அழிவிற்கும் பின்னடைவிற்கும் காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

30 வருடத்தில் மக்கள் எதுவும் பெறவில்லை, அந்த பின்னடைவிற்கு தமிழ் தலைமைகள் தான் காரணம். மாகாண சபையினை தும்புத்தடியாலும் தொடமாட்டோம் என்றவர்கள் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அந்த அதிகாரத்தினைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

அதனால், இந்த முறை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருக்கு வாய்ப்பினைத் தந்து பாருங்கள். சந்தர்ப்பம் கிடைத்தால், வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓடும். எனவே, எமக்கு வாய்ப்பு தந்து பாருங்கள் சரிவர பயன்படுத்திக் காட்டுவோம் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.