இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்பட்டிருந்தது.இது தொடர்பாக அந்த கட்சியினால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கட்சியை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று     நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சிக் கிளைகள் அமைக்கப்பட்டு இலங்கை தமிழரசுக் கட்சியை பலப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அவற்றிற்கான தீர்வுகள் எடுக்கப்படுவதுடன் அவற்றை நிறைவேற்றுவது என்றும் ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.