தோழர் சின்னைய்யா கமலபாஸ்கரன்

திருகோணாமலை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவில் லண்டனை வதிவிடமாகவும்
கொண்ட தோழர் கமலபாஸ்கரன் அவர்கள் இன்றையதினம் பிரித்தானியாவில் இன்று
(19.06.18) செ;வாய்க்கிழமை காலமானார் என்ற துயரச் செய்தியினை மிகுந்த
துயருடன் அறியத் தருகின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மூத்த முன்னோடி தோழர்களில் ஒருவரும்
மருத்துவதுறை பணியாளருமான தோழர் கமலபாஸ்கரன் அவர்கள். தமிழீழ விடுதலை
புலிகளின் ஆரம்பகால உறுப்பினராக பிரித்தானியாவில் இருந்து செயலாற்றி
பின்னர் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) அமரர் செயலதிபர்
உமாமகேஸ்வரன் தலைமையில்; 1980இல் தோற்றம் பெற்றபோது அவ் அமைப்பின்
முக்கிய செயற்பாட்டாளராக பிரித்தானியாவில் இருந்து செயலாற்றிய தோழர்களில்
முதன்மையானவர். செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்கள் மீதும்
கழகத்தின் மீதும் அளப்பரிய பற்றுதல் கொண்டிருந்த தோழர் கமலபாஸ்கரன்
ஆரம்பத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக ஜரோப்பாவில் இருந்து வட
அமெரிக்காவரையும் மேலும் பல நாடுகளுக்கும் பல ஆயிரம் மைல்கள் பயணித்து
கட்சி நடவடிக்கைளிற்காக உழைத்த ஒர் உண்மையான தோழர்,
இவர் தனது இறுதிமூச்சுவரை கழகத்தின் தோழனாக இருந்து ஈழத்தமிழின இனத்தின்
விடுதலையை நேசித்த தோழர். நோய்வாய்ப்பட்ட நிலையிலும் கட்சியின் நிலை
குறித்து தோழர்களுடன் கருத்துக்களை பரிமாறி ஆலோசனைகளை வழங்கிய தோழர்,
தோழர் கமலபாஸ்கரன் அவர்களின் இழப்பு கட்சிக்கும் இனத்திற்கும் பேரிழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள்,
நண்பர்களுடன் நாமும் இப் பெருந் துயரினை பகிர்ந்து கொள்கிறோம்.

 

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி –DPLF
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – PLOTE