ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணைக்குழுவின் 38 ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கையின் வடக்கு கிழக்கில் இருந்து காணாமல் போனோர் சங்கத்தின் தலைவிகள் சென்றுள்ளார்கள்.
இவர்கள் 20.06.18 அன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து ஜெனீவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பிலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசு அமைந்துள்ள காணாமல் போனோர் அலுவலத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் இவர்கள் எடுத்துரைக்கவுள்ளார்கள்.
ஜ.நா மனித உரிமை ஆணைக்கழுவின் 38 ஆவது கூட்டத்தொடர் யூன் 18 ஆம் திகதி தொடக்கி யூலை 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது